வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (15:05 IST)

மீண்டும் சந்தோஷ் நாராயணனோடு இணைவேனா? இயக்குனர் பா ரஞ்சித் பதில்!

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்- இசையமைப்பாளர் வெற்றிக் கூட்டணியில் கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த கூட்டணி பா ரஞ்சித்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி. இவர்கள் இணைந்து உருவாக்கிய அனைத்துப் படங்களின் பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.

ஆனால் சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. கடைசியாக அவர் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்துக்கு தென்மா இசையமைப்பாளராக பணியாற்றினார். இந்நிலையில் விக்ரம் 61 படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் மீண்டும் சந்தோஷ் நாராயணன் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசியுள்ளார். அதில் “நாங்கள் இருவருமே இணைந்து எடுத்த முடிவுதான். மீண்டும் நாங்கள் இணைந்து பணியாற்றவே மாட்டோம் என்றில்லை. நான் அழைத்தால் அவர் வந்துவிடுவார் என்றுதான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு நாங்கள் ஒன்றும் சண்டை போட்டுக்கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.