1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 ஜூன் 2023 (10:25 IST)

இன்று முதல் மீண்டும் தங்கலான் ஷூட்டிங்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

இந்த படத்தை ஆஸ்கர் மற்றும் கேன்ஸ் உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக படத் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தங்கலான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு  முன்னர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் விக்ரமுக்கு விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் ஷூட்டிங் தடைபட்டு இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் 20 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாகவும் விரைவில் ஷூட்டிங் முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.