வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (19:25 IST)

பக்கா பிளான்....கமல்ஹாசன்- ஹெச்.வினோத் படத்தில் இணைந்த விஜய்சேதுபதி?

kamalhasan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து, மணிரத்னம் இயக்கவுள்ள கமல்ஹாசன் 234 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் நடக்கவுள்ளதாகவும், இப்படத்தில் மீண்டும் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே கமலுடன் இணைந்து விஜய்சேதுபதி விக்ரம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதிபதி கமலுடன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஹெச். வினோத் சமூக அக்கறையுள்ள ஒரு கதையை எடுக்கவுள்ளதாகவும், இதில், கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.