வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (20:59 IST)

‘மாஸ்டர்’ படத்தால் பிரபல இயக்குனரை தவிக்க விட்டாரா சந்தானு?

இயக்குனர் கே பாக்யராஜ் மகன் சாந்தனு நடிப்பில் மதயானைகூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கவிருந்த ’ராவண கூட்டம்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் திடீரென ’மாஸ்டர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் சாந்தனு ’மாஸ்டர்’ படத்திற்கு சென்றுவிட்டார் இதனால் ’ராவண கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
 
இந்த நிலையில் தற்போது ’தேரும் போரும்’ என்ற படத்தை விக்ரம் சுகுமாறன் இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது 
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ராஜீவன் கலை இயக்கத்தில் சுகுமாரின் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாந்தனு நடிக்கவிருந்த ‘ராவண கூட்டம்’ படம் தான் டைட்டில் மாற்றப்பட்டு ‘தேரும் போரும்’ என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சாந்தனுக்காக காத்திருந்து ஏமாந்த இயக்குனர் விக்ரம் சுகுமாறன் பொறுமை இழந்து தற்போது தினேஷை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இருப்பினும் ’ராவண கூட்டம்’ படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமில்லை என்றும் இது வேறு படம் என்றும் இந்த படத்தை முடித்தவுடன் சாந்தனு நடிக்கும் ’ராவண கூட்டம்’ படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது