1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (10:30 IST)

KGF ராக்கி கெட்டப்பில் சாந்தனு வெளியிட்ட மிரட்டலான "மாஸ்டர்" லுக்!

நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் நடிகர் சாந்தனு. ஒரு நடிகர் எனப்தையும் தாண்டி சிறந்த டான்ஸராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். 
 
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "மாஸ்டர்" படத்தில் பேராசிரியராக நடிக்கும் விஜய்க்கு மாணவராக நடித்து வருகிறார். இதற்காக தனது முழு எபோர்ட்டையும் போட்டு நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது தாடி வைத்து குடும்பி போட்டு வித்யாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார். சமீபத்தில் ட்விட்டரில் இந்த மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். மேலும் இந்த லுக்கில்  நீங்கள் KGF யாஷ் போல் இருக்கிறீர் என சிலர் கூறி வருகின்றனர்.