நீண்ட இடைவேளைக்குப் பின் விஜய்யுடன் இணையும் பழம்பெரும் நடிகர்

Last Modified புதன், 18 டிசம்பர் 2019 (12:43 IST)
தளபதி விஜய் நடித்த தமிழன்’, ‘ஆதி’, ‘வசீகரா’, ‘குருவி’, ‘போக்கிரி’ போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் நாசர் கடந்த சில ஆண்டுகளாக விஜய் படத்தில் நடிக்காத நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ’தளபதி 64’ படத்தில் இணைந்துள்ளார்

‘தளபதி 64’ படத்தில் நடிக்க நாசர் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒருசில தினங்களில் அவர் கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த படத்தில் நாசருக்கு விஜய் உடன் நெருக்கமாக இருக்கும் ஒரு முக்கிய கேரக்டர் என்றும் இந்த கேரக்டர் தான் படத்தின் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது நாசரும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :