விக்ரம் - கமல் இணைந்த 'கடாரம் கொண்டான்'- பர்ஸ்ட் லுக்..!
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகரும், மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
சாமி ஸ்கொயர் படத்தையடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்கிறார் . கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளாா்.தற்போது விக்ரம் கடாரம் கொண்டான் படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.விக்ரமின் 56-வது படமான இந்தப் படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.