வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (18:03 IST)

கமலின் “இந்தியன்-2“ அடுத்த மாதம் ஆரம்பம் - சங்கர்

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.
 
 
இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று கமல்  ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளிவந்தது. 
 
இந்நிலையில் தற்போது இந்தியன் 2-வைப் பற்றி பேசியிருக்கும் சங்கர்,"இந்தியன் போன்ற சாயலில் நான் ஏற்கனவே நிறைய படம் இயக்கிவிட்டேன். மற்ற சில இயக்குனர்களும் இயக்கி விட்டார்கள். அதனால், ‘இந்தியன் 2'-வை எப்படி இயக்க வேண்டும் என்பதை விட எப்படியெல்லாம் இயக்கக் கூடாது என்ற தெளிவைப் பெறவே மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன. 
 
அதற்கு பிறகு கதையின் ஃபைனல் காப்பியை கமல்ஹாசனிடம் சொன்னேன். நான் ரசித்து எழுதியைதை அவரும் ஆர்வத்தோடு கேட்டார். இறுதியாக இதன் படபிடிப்பை வரும் டிசம்பரில் துவங்க இருக்கிறோம்" என்று கூறினார் இயக்குனர் சங்கர்  .