"பேட்ட" படத்திற்கு பாட்டெழுதிய "சர்கார்" பாடலாசிரியர் !
ரஜினிகாந்தின் "பேட்ட" படத்தின் மரண மாஸ் பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேக்.
‘2.0’ பட வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது , பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை ஆளப்போறன் தமிழன் புகழ் விவேக் தான் எழுதியுள்ளார் என்று அனிருத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தளபதியை தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டாருக்கு சிறப்பாக எழுதியிருப்பார் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் சினிமா ரசிகர்கள். இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்திற்கும் விவேக் தான் பாடலாசிரியர் என்பது கூடுதல் தகவல்.