விஜய்யின் அடுத்த படம் யோகன் ? ரசிகர்கள் ஆர்வம்
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் அடியே. இப்படத்தை ஏன்டா தலையில எண்ண வைக்கல், திட்டம் ஆகிய படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கி வருகிறார்.
இப்படத்தில், வெங்கட்பிரபு, கவுரி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார்.
சமீபத்தில், இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியான நிலையில், இப்படத்தில் பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று நடிகர் தனுஷ் தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
இதில், நடிகர் விஜய் யோகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதாகவும், இதன் வெற்றி விழாவில் இந்திய பிரதமர் கேப்டன் விஜயகாந்த் வருகை தந்துள்ளதாகவும் ஜிவி.பிரகாஷ்குமார் பட டிரெய்லரில் ஒரு போஸ்டர் இடம்பெற்றுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு கெளதம் மெனன் இயக்கத்தில், விஜய் நடிக்க யோக அத்தியாயம் ஒன்று என்ற உருவாகவுள்ளதாக போஸ்டர் வெளியானது வெளியானது குறிப்பிடத்தக்கது.
எனவே விஜய்யின் அடுத்த படம் யோகன் ? ஆக இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.