விஜய்யின் வாரிசு படத்தின் வசனங்களை எழுதும் பிரபல பாடல் ஆசிரியர்… ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் ஃப்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது. சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது போலவே படத்துக்கு வாரிசு என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்ரஎ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதும் விவேக், படத்தின் தமிழ் வசனத்தையும், கூடுதல் திரைக்கதையையும் எழுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.