புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (16:11 IST)

''விஜய்67'' எப்படிப்பட்ட படம் ?லோகேஷ் கனகராஜ் முக்கிய தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று மாலை6 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய்67 படத்தில் நடிக்கவுள்ளது இந்திய சினிமாவில் பேசு பொருளானது.

தற்போது விக்ரம் படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்துள்ளதால், விஜய்67 படம் என்ன கதை என ரசிகர்கள் கேள்வி கேட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ், விஜய்67 பட பக்கா ஆக்சன் படம் எனவும் இது எனது பழைய ஸ்கிரிப்ட் மற்றும் என் மனதிற்கு நெருக்கமான கதை என்றும் , இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலை முடிந்தாலும், திரும்பவும்  வேலை செய்து வருகிறேன். என் படக்குழுவை நான் மாற்ற வில்லை, நாங்கள் திரும்பவும் ஒன்றாக இணைகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

அதனால், இப்படத்திற்கும் இப்போதிருந்தே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.