திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 21 ஜூன் 2022 (18:17 IST)

வாரிசு (The BOSS Returns) - இம்முறை தளபதி பொங்கல்!!

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் மற்றும் ஃப்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. 
 
விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் மற்றும் ஃப்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் படத்திற்கு வாரிசு என பெயரிட்டுள்ளனர். இந்த திரைப்படம் ஒரு குடும்ப செண்ட்டிமெண்ட் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.