மீண்டும் வருகிறது விஜய் டி வியின் ஹிட் நிகழ்ச்சி… சிவகார்த்திகேயன் இடத்தில் இவரா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெற்றிகரமான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் ஒன்று அது இது இது. 2009 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியை முதலில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சுற்றான சிரிச்சா போச்சு இணையத்தில் வைரலானது. அதில் கலந்துகொண்ட ரோபோ ஷங்கர், வடிவேல் பாலாஜி மற்றும் ராமர் ஆகியோரின் நகைச்சுவைகள் வெகு பிரசித்தம்.
ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ ஆனதும் அவருக்குப் பதில் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்கினார். ஆனால் சிவகார்த்திகேயன் இருந்த போது கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால் இரண்டாவது சீசனோடு நிறுத்தப்பட்டது. இப்போது பல ஆண்டுகள் கழித்து இந்நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கப்பட உள்ளது. வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மீண்டும் தொகுத்து வழங்க உள்ளார்.