1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (07:25 IST)

’800’ பட விவகாரம்: விஜய்சேதுபதியிடம் பேசிய விஜய்?

’800’ பட விவகாரம்: விஜய்சேதுபதியிடம் பேசிய விஜய்?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர் 
இயக்குனர் இமயம் பாரதிராஜா, சீமான், வைரமுத்து, சீனு ராமசாமி, கவிஞர் தாமரை உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் விஜய் சேதுபதிக்கு கண்டனமும் அறிவுரையும் தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் விஜய் சேதுபதி தங்களது எதிர்ப்பை மீறியும் ’800’ படத்தில் நடித்தால் அவருடைய ’மாஸ்டர்’ படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து விஜய் சேதுபதியிடம் தளபதி விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த படத்தில் இருந்து விலக முடியுமா என்று முயற்சி செய்ய விஜய்சேதுபதிக்கு அவர் அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது
 
ஆனால் ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இப்போதைக்கு இந்த படத்தை தொடங்காமல் ஒரு வருடம் கழித்து தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி கூறப்படுகிறது