தெலுங்கில் ரீமேக் ஆகும் டிரைவிங் லைசென்ஸ்! விஜய் சேதுபதி வேண்டும் என அடம்பிடிக்கும் நடிகர்!
மலையாள இயக்குனர் சாச்சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டிரைவிங் லைசன்ஸ் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
மறைந்த இயக்குனர் சாச்சி திரைக்கதை எழுதி பிருத்விராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் டிரைவிங் லைசன்ஸ். ஒரு உச்ச நட்சத்திரத்துக்கும் அவரின் தீவிர ரசிகரான டிராபிக் இன்ஸ்பெக்டருக்கும் இடையே ஏற்படும் மோதலே படத்தின் கதை. இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்போது தெலுங்கில் இந்தபடத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
ராம்சரண் பிருத்விராஜ் வேடத்தில் நடிக்க சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம் ராம்சரண். சமீபகாலமாக விஜய் சேதுபதிக்கு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.