திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (17:57 IST)

லாபம் படத்தின் ஒரு நாள் ஷூட்டிங் நிலுவை… விரைவில் முடிக்கும் படக்குழு!

இயக்குனர் ஜனநாதன் மறைந்த நிலையில் லாபம் படத்தின் மீதமுள்ள ஒருநாள் ஷூட்டிங் விரைவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்துக்குப் பின் விஜய் சேதுபதி லாபம் எனும் படத்தில் நடிக்கிறார். இது கிராமப்புற பின்னணியைக் கொண்ட விவசாயம் பற்றிய படமாகும். இதில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்த நிலையில் கொரோனா லாக்டவுனால் படப்பிடிப்பு தடைபட்டது. இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நடந்து முடிந்த நிலையில் இயக்குனர் ஜனநாதன் திடீரென காலமானார். அவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் லாபம் படத்துக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் இருப்பதாகவும், அதை விரைவில் ஜனநாதனின் உதவியாளர்களை வைத்து விரைவில் படமாக்கி முடிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.