திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (15:12 IST)

விஜய் சேதுபதிக்கு கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கிய தயாரிப்பாளர்… பின்னணி என்ன?

விஜய் சேதுபதி லலித் குமார் தயாரிப்பில் ஏற்கனவே மூன்று படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சமீபகாலமாக விஜய் சேதுபதிக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பாளராக இருந்தவர் லலித் குமார். இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், மாஸ்டர்  ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர். மேலும் அடுத்து ஒரு படத்திலும் இணைந்து பணியாற்ற ஒரு படத்துக்கு அட்வான்ஸும் விஜய் சேதுபதிக்குக் கொடுத்திருந்தார்.

ஆனால் இப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பிப் பெற்றுக் கொண்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.