1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (12:12 IST)

14 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை திடுக்கிடும் குற்றச்சாட்டு

floara
14 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை திடுக்கிடும் குற்றச்சாட்டு
தயாரிப்பாளர் ஒருவர் தன்னை 14 மாதங்கள் பாலியல் தொல்லை செய்தார் என நடிகை புளோரா சைனி திடுக்கிடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
 
விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, ரஜினிகாந்த் நடித்த குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புளோரா சைனி. இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் 14 மாதங்கள் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் சித்ரவதை செய்ததாகவும் கூறியுள்ளார்
 
14 மாதங்கள் அவரிடம் நரக வேதனையை அனுபவித்தேன் என்றும் அதன் பிறகு ஒரு வழியாக தயாரிப்பாளரிடம் இருந்து தப்பித்து என் பெற்றோரிடம் சேர்ந்து விட்டேன் என்றும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அந்த தயாரிப்பாளரிடம் தான் சிக்கியிருந்தபோது தன்னை கடுமையாக அடித்து காயப்படுத்தினார் என்றும் போன் கூட பேச விடவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran