1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (14:34 IST)

ஹிட் பட இயக்குனர் இயக்கத்தில் விஜய் சேதுபதி! இன்று முதல் ஷூட்டிங்!

இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்‌ஷன் படம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் ஆக்‌ஷன் படமாக உருவாக உள்ளதாக இயக்குனர் நித்திலன் கூறியுள்ளார். இன்று சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.