விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏழைகளுக்கு தினமும் உதவி !
தமிழகத்தில் கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இத்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், கொரொனா கால ஊரடங்கில் பலரும் வேலை வாய்பிழந்து தவித்து வருகின்றனர். ஏழைகளுக்கு சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர், அருப்புக்கோட்டையில் உள்ள வீடு இன்றி சாலை ஓரமாய் வசித்துவரும் மக்களுக்கு தினமும் உணவு கொடுத்து உதவி வருகின்றனர். இந்த நற்பணிக்கு விஜய் மன்றத்தினரை மக்கள் பாராட்டி வருகின்றனர்.