வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (23:37 IST)

விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் தலைவர் புகைப்படத்தை காறித்துப்பிய நிர்வாகிகள்

சமீபத்தில் பொங்கலுக்கு உலகமெங்கும் உள்ள தியேட்டர்களில் விஜய்யின்  மாஸ்டர் படம் ரிலீஸானது.

இப்படத்திற்கான ரூ.100 மதிப்புள்ள டிக்கெட்டுகள் ரூ.1000க்கு விற்கப்பட்டதாக நடிகர் விஜய்யின் தந்தை ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார்.

எனவே விஜய் மக்கள் இயக்கத்தில் தற்போதைய தலைவர் புஸ்சி ஆனந்த் மீது முன்னாள் தலைவர் ஜெயசீலர் மோசடி புகார் அளித்துள்ளார்.குறிப்பாக லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு மன்றத்தில் பதவி கொடுத்துவருவதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஜெயசீலனை தொடர்பு கொண்டு திட்டினர். இதுகுறித்த ஆடியோ வைரலாகிவருகிறது. மேலும் ஜெயசீலன் சிலரை தகாத வார்த்தையில் திட்டியதால அவருக்கு எதிராகப் காவல்துறையில் புகார் தெரிவித்ததுடன் அவரது புகைப்படத்தை காறித்துப்பினர்.