ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (08:41 IST)

விஜய் & சூப்பர் குட் பிலிம்ஸ் இணையும் புதிய படம்… கதை சொன்ன இளம் இயக்குனர்கள்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு, விஜய் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் விஜய், சமீபத்தில் தன்னிடம் தேதி கேட்டு காத்திருக்கும் சில முன்னணி தயாரிப்பாளர்களை சந்தித்துள்ளாராம். அதில் ஏஜிஎஸ் நிறுவனம், சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி உள்ளிட்ட ஏற்கனவே விஜய்யை வைத்து படம் தயாரித்தவர்களும் இடம்பெற்றிருந்தனர் என்று சொல்லப்படுகிறது.

இதில் ஆர் பி சௌத்ரிக்கு விஜய் படம் பண்ணப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆர் பி சௌத்ரி இப்போது அந்த படத்துக்காகக் கதை கேட்டு வருகிறாராம். சமீபத்தில் அவர் அடங்கமறு இயக்குனர் கார்த்திக் தங்கவேல், ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் வாலு, ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் உள்ளிட்ட பலர் சந்தித்து கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.