வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:53 IST)

அடுத்து ஒரு மலையாள படத்தை ரீமேக் செய்யும் இயக்குனர் ஆர் கண்ணன்… தொடங்கிய ஷூட்டிங்!

தமிழ் சினிமாவில் ஜெயம்கொண்டான் திரைப்படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக அறிமுகமாகிய ஆர் கண்ணன், கண்டேன் காதலை உள்ளிட்ட சில வெற்றிப் படங்களை இயக்கினார். ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியாக தோல்வி படங்களைக் கொடுத்த அவர் ஒரு கட்டத்தில் ரீமேக் படங்களை இயக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் தி கிரேட் இந்தியன் கிச்சன், காசேதான் கடவுளடா ஆகிய படங்களை குறுகிய காலத்தில் இயக்கி முடித்தார். அந்த வகையில் இப்போது மலையாளத்தில் வெளியாகி ஹிட் ஆன ‘ரிங் மாஸ்டர்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் நடிகர் ஆர் கே கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியுள்ளது.