புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:49 IST)

லியோ படத்தில் எத்தனைப் பாடல்கள்… ரசிகர்களை அப்செட் ஆக்கும் தகவல்!

விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீரில் 60 நாட்களுக்கும் மேல் சென்று முக்கியமானக் காட்சிகளை படமாக்கி சென்னை திரும்பியுள்ளனர். இதையடுத்து சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கான பிரம்மாண்டமான பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆயிரத்த்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் விஜய்யோடு இணைந்து ஆட உள்ளார்களாம். இந்த பாடலை தினேஷ் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்த மகிழ்ச்சியான செய்தியோடு விஜய் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்யும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் லியோ படத்தில் இந்த ஒரே ஒரு பாடல் மட்டும்தான் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. விஜய் படங்களைப் பொறுத்தவரை பாடல்களும், அவரது நடனமும் தனி ரசிகர் கூட்டத்தை வரவழைப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.