காதல்கோட்டையை மறுத்த விஜய் – மனம் திறந்த தயாரிப்பாளர்
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த காதல்கோட்டை படத்தில் முதலில் விஜய்யைதான் நடிக்க கேட்டதாக தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அஜித் நடிக்க வேண்டிய பல படங்கள் பிற ஹீரோக்கள் கைக்குப் போயுள்ளது. அதில் நடித்த அவர்களும் மிகப்பெரிய ஸ்டார்களாக உருவாகியுள்ளார்கள். ஆனால் ஆரம்பகாலத்தில் விஜய் நடிக்க வேண்டிய இர்ண்டு படங்களில் அஜித் நடித்துள்ளார் என்பதும் அந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது என்பதும் என்பது யாருக்கும் தெரியாத விஷயம்.
இதுபற்றி வான்மதி, காதல்கோட்டை ஆகிய இரண்டு படங்களை அஜித்தை வைத்து தயாரித்த சிவசக்தி பாண்டியன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் இது குறித்து பேசியுள்ளார். அதில் ‘ படவிநியோகம் செய்து கொண்டிருந்த எனக்கு அதில் கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டது. அதனால் படம் தயாரிக்க முடிவு செய்து விஜய் அப்பாவிடம் கால்ஷீட் கேட்டேன். ஆனால் அவரோ நீங்கள் எப்படி படம் தயாரித்து முடித்து அதை விளம்பரப்படுத்துகீறீர்கள் என பார்த்துவிட்டு பிறகு கால்ஷீட் தருகிறோம் எனக் கூறினார். அதனால் வான்மதி கதையை அஜித்திடம் கூறினோம். சம்பளமே பேசாமல் அஜித் நடித்துக் கொடுத்தார். அதேப்போல காதல் கோட்டைப் படத்தையும் விஜய்யிடம் சொல்லியபோது அவர் கால்ஷீட் கிடைக்கவில்லை. அதையும் அஜித் சம்பளமே பேசாமல் நடித்துக் கொடுத்தார். இரண்டு படங்களும் மெஹா ஹிட்டாகின’ எனக் கூறியுள்ளார்.