செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (19:53 IST)

அமலா பால் சேப்டர் க்ளோஸ்; புது வாழ்க்கையை துவங்கிய விஜய்!

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் திருமணம் அமைதியான முறையில் நேற்று நடந்து முடிந்தது. 
 
அஜித் நடித்த கிரீடம் படம் மூலம் இயக்குநரானவர் ஏ.எல்.விஜய். தனது அடுத்தடுத்த படைப்புகளில் விஜய், விக்ரம், ஆர்யா, விக்ரம் பிரபு, பிரபு தேவா உள்ளிட்டவர்களை வைத்து படம் இயக்கினார்.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை அமலா பாலை திருமணம் செய்துக் கொண்ட இவர் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துக் கொண்டனர். 
 
இதைத்தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த விஜய்க்கு தற்போது 2வது திருமணம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 
 
இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டுள்ளனர். சினிமா பிரபலங்கள் யாரும் இதில் கலந்துக்கொண்டதாய் தெரியவில்லை.