புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (09:41 IST)

விஜய் ஆண்டனி நடிகராக நிறையவே தேறிவிட்டார்… இயக்குனர் புகழாரம்!

விஜய் ஆண்டனி இப்போது விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்னர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடவே அது கவனத்தைப் பெற்றது. இந்த படத்தில் சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தைப் பற்றி பேசியுள்ள இயக்குனர் விஜய் மில்டன் நடிகராக விஜய் ஆண்டனி நிறையவே முன்னேறிவிட்டார் என்று கூறியுள்ளார். ’எதுவுமே இல்லாத ஒருவனை எல்லாமே இருக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் போது உருவாகும் பிரச்சனையே கதை. இந்த படம் விஜய் ஆண்டனிக்கு தனித்த அடையாளத்தை இந்த படம் தரும்’ எனப் பேசியுள்ளார்.