1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (16:24 IST)

''விஜய் மக்கள் இயக்க'' நிர்வாகிகளை சந்தித்த விஜய்!

Vijay
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள்  நடித்து வருகின்றனர்.

வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாவதை ஒட்டி சென்னி மெட்ரோ ரெயில்களில் இப்படத்தை லலித்தின் செவன் ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் புரமோசன் செய்து வருகின்றன.

இந்த நிலையில், அஜித்தின் துணிவு படத்துடன் விஜய்யின் வாரிசு மோதவுள்ளதால், கடும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Vijay

இந்த நிலையில்,இன்று  விஜய் மக்கள் இயக்க 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை காலை 9 மணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், பனையூரியில் உள்ள விஜய் அலுவலகத்தில் அவர்களை  விஜய் சந்தித்துள்ளார்.

கடந்த மாதம் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், ஆகிய மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Edited By Sinoj