1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (08:23 IST)

24 மணிநேரத்தில் சாதனை படைத்த விஜய்யின் “நா ரெடி வரவா” பாடல்!

மாஸ்டர் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் மேல் எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையில் விஜய்யே பாடியிருந்தார். விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

வெளியானதில் இருந்து ரசிகர்களிடம் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களால் யுடியூபில் பார்க்கப்பட்டுள்ளது. இதை சோனி ம்யூசிக் நிறுவனம் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.