செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 5 மே 2021 (18:15 IST)

மு.க.ஸ்டாலினை நேரில் வாழ்த்திய விஜய், கமல் பட நடிகர்

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையாக 125 தொகுதிகளில் வெற்றி  பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை  வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார் ஸ்டாலின். இதையடுத்து, இன்று மதியம் ஸ்டாலினைன் ஆட்சி அமைக்குமாரு அழைப்பு விடுத்தால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

வரும் 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.  இதற்கான விழா ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விஜய் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த மலையாள நடிகர் ஜெயராம், மற்றும் அவரது மகல் காளிதாஸ் இருவரும் முக.ஸ்டலினை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.