செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (17:14 IST)

’கோட்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் அறிவிப்பு.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்..!

Goat Poster
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். 
 
’கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த அறிவிப்பில் சூப்பர் போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
எனவே நாளை மறுநாள் ’கோட்’  படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் இதனை இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் வெங்கட்ராஜன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Siva