1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (11:14 IST)

ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து.. தவெக தலைவர் விஜய் சுதந்திர தின வாழ்த்து..!

நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையிலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலும் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தனது சமூக வலைதளத்தில் அனைவருக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
 
அந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது: சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை கடந்து சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும் நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவு கூர்ந்து எந்நாளும் போற்றுவோம்.
 
எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்து போராடி பெற்ற இந்த விடுதலையை கொண்டாடி மகிழ்வோம், நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம்’ என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva