1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (09:39 IST)

தங்கலானே வெல்கவே நீ ஆதியோனே – தங்கலான் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த மாரி செல்வராஜ்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இன்று தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. தற்போது காலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய மேஜிக்கல் ரியலிச கதையாக இந்த படத்தை ரஞ்சித் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று வெளியாகும் இந்த படத்துக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில் “லானே, தங்கலானே… வெல்கவே நீ ஆதியோனே.. வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா, விக்ரம் சார்.பெரும் உழைப்பின் வழி பெரும் வெற்றிக்குத் தயாராகும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பிரியமும்” என வாழ்த்தியுள்ளார்.