தளபதி விஜய்யின் 'வெறித்தனம்' பாடல்! உலக அளவில் டிரெண்டிங்!
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் 'வெறித்தனம்' என்ற சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் நேற்று தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம். இதனை அடுத்து சற்று முன் இந்த வெறித்தனமான பாடலை அர்ச்சனா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
தளபதி விஜயின் குரலில் அட்டகாசமாக உருவாகியுள்ள இந்த பாடலை கேட்பவர்கள் உடனே எழுந்து ஆடும் வகையில் அட்டகாசமாக உள்ளது. இந்த் பாடலில் விஜய் அடிக்கடி மேடைகளில் பயன்படுத்தும் 'நெஞ்சில் குடியிருக்கும்' என்ற வரிகள் திரையில் தோன்றும்போது திரையரங்குகள் என்ன பாடுபடுமோ என விஜய் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பாடல் வெளியான சில நிமிடங்களில் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் பாடல் வரிகளில் தளபதியின் குரலில் வெறித்தனமாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது