விஜய் படத்தில் விஜய்சேதுபதி வில்லனா? படக்குழுவினர் விளக்கம்

Last Modified புதன், 28 ஆகஸ்ட் 2019 (08:00 IST)
தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் 'பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படமான தளபதி 64' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தை 'கைதி' திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும், இந்த படத்தில் வில்லன் கேரக்டர் வெயிட்டாக இருப்பதால் அந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடக்க நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர் தற்போது மறுத்துள்ளனர். இந்த படத்தில் விஜய் தவிர மற்ற நடிகர் நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் யூகத்தின் அடிப்படையிலானது என்றும் கூறியுள்ளனர்

ஆனாலும் இந்த செய்தி தொடர்ச்சியாக பரவிவருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'சுந்தரபாண்டியன், விக்ரம் வேதா, பேட்ட ஆகிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அவர் 'விஜய் 64' படத்திலும் வில்லன் வேடத்தில் நடிப்பார் என்று கருதப்படுகிறது. மேலும் 'தளபதி 64; திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் விஜய்யின் கேரக்டரை விட வெயிட்டாக இருப்பதால் அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் தற்போது விஜய்சேதுபதி சுமார் எட்டு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் தளபதி 64 'குழுவினர் கேட்கும் தேதிகளை அவரால் கொடுக்க முடியுமா என்ற என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :