புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (10:48 IST)

தீபாவளியை மிஸ் செய்கிறதா ‘பிகில்’?

விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என இந்த படம் தொடங்கப்பட்ட நாள் முதல் கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது வந்து கொண்டிருக்கும் தகவல்களை பார்க்கும்போது இந்த படம் தீபாவளியை மிஸ் செய்துவிடும் போல் தெரிகிறது
 
தீபாவளிக்கு இன்னும் 21 நாட்களே இருக்கும் நிலையில் இன்னும் ‘பிகில்’ திரைப்படம் சென்சாருக்கு கூட விண்ணப்பம் செய்யவில்லை என கூறப்படுகிறது. தற்போதைய சென்சார் விதிகளின்படி ஒரு படம் சென்சார் செய்ய, 24 நாட்களுக்கு முன் விண்ணப்பித்திருக்க வேண்டும். 
 
மேலும் இந்த படத்தின் புரமோஷனும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. டீசர், டிரைலர், பத்திரிகையாளர் சந்திப்பு என எந்தவித புரமோஷனும் தொடங்கப்படாமல் தயாரிப்பு தரப்பு அமைதி காட்டி வருவதும் சந்தேகத்தை வரவழைப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
மேலும் இந்த படம் தீபாவளிக்கு வெளிவருவதை தடுக்க ஒருசில அரசியல்வாதிகளும் திட்டமிட்டு வருவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் என ‘கைதி’ மற்றும் ‘சங்கத்தமிழன்’ ஆகிய திரைப்படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘பிகில்’ படத்தின் எந்தவித அப்டேட்டும் வராமல் இருப்பது விஜய் ரசிகர்களின் சந்தேகத்தை அதிகரித்துள்ளது