திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (08:01 IST)

மாஸ்டர் ஷூட்டிங் அப்டேட்:விஜய் ரசிகர்களுக்குள் வந்த போட்டி !

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இப்போது கடலூரில் நடந்து வரும் நிலையில் அதுகுறித்து விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் போட்டி போட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி , மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டன. இப்போது நெய்வேலியில் நடக்கும் படப்பிடிப்பு அடுத்ததாக கடலூர் சிறையில் நடகக் இருக்கிறது.

இந்நிலையில் கடலூர் சிறையில் எடுக்கப்பட இருக்கும் காட்சிகள் விஜய்யின் அறிமுகக் காட்சி என்று ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் அது விஜய் சேதுபதியின் அறிமுகக் காட்சி என்றும் சமூக வலைதளங்களில் சண்டை போடாத குறையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏறகனவே விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அவரைப் படக்குழு அவமதித்து விட்டதாக சர்ச்சைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.