திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 29 ஜனவரி 2020 (15:36 IST)

தளபதி65 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா..? வெயிட்டான தகவல்!

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான தளபதி 65 குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
இந்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து பெரிய கருத்துக்கள் நிலவி வந்த நிலையில்  இப்படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கவிருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபட்டு வருகிறது. இவர் நடிகர் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இதுகுறித்து மீண்டும் ஒரு சூப்பரான செய்தி வெளிவந்துள்ளது. அதவாது, தளபதி 65 படத்திற்கு  ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைவிருக்கிறாராம். இவர் தற்போது   சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவரவிருக்கும்  சூரரை போற்று படத்திற்கு இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற  தகவல் வெளிவந்தது கூடுதல் தகவல்.