திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 30 ஜனவரி 2020 (11:16 IST)

அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய விஜய் டிவி - வைரல் வீடியோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பான  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். 
 
தற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. அதையடுத்து சமீபத்தில் தான் இவருக்கு  இஸ்லாமிய முறைப்படி சீமந்தம் நடைபெற்றது. அதையடுத்து கடந்த டிசம்பர் 28ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார். 
 
இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்து முதன் முறையாக விஜய் டிவிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு நிஷாவின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். அந்நிகழ்ச்சியின்  ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.