வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 29 ஜனவரி 2020 (14:10 IST)

அடங்கொய்யால... எலிய உயிரோட திங்குறானே படுபாவி - "மாஸ்டர்" நடிகர் வெளியிட்ட வீடியோ!

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தாக்கி நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்காக மக்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் உயிர் பலி அதிகரித்து வருகிறது. 
 
இதற்காக பலவேறு தரப்பினரும் விழிப்புணர்வூ ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ஸ்ரீமன் தனது ட்விட்டர் பக்கத்தில் "கரோனா வைரஸ் நோய் தொடர்பான விவரங்களை கேட்டறிய மத்தியஅரசு 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. 911123978046 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது என தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது வெளிநாட்டவர் ஒருவர் உயிருடன் எலியை பிடித்து சாப்பிடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள், " இப்படி கண்டத கண்டமாறி திங்க வேண்டியது அப்புறம் வைரஸ் தாக்குது மயிரஸ் தாக்குதுன்னு அழுகவேண்டியது" இதனால்தான்  இவங்களுக்கு வராத நோய் கூட வந்துருது என ஆளுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.