பாஜகவை உசுப்பேற்றும் டைட்டிலை வைத்த விஜய் படக்குழுவினர்
சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜகவினர் நோட்டாவை விட குறைவான ஓட்டுக்களை வாங்கியிருந்ததை கேலி செய்யாத அரசியல் கட்சிகளே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் ஒரு திரைப்படத்திற்கு 'நோட்டா' என்ற டைட்டிலை வைத்து பாஜகவினர்களை உசுப்பேற்றியுள்ளனர் படக்குழுவினர்
ஆம், அர்ஜூன்ரெட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ்ப்படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்குத்தான் 'நோட்டா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதுவொரு பக்கா அரசியல் படம் என்று கூறப்படுகிறது.
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் இயக்கும் மூன்றாவது படமான இந்த படத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' நாயகி மெஹ்ரீன், விஜய்தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா இந்த படத்தை பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.