கட்டுமஸ்தாக மாறும் விஜய்: எல்லாம் அட்லிக்காக...
சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்து மூன்றாவது முறையாக அட்லியுடன் இணைந்துள்ளார். இந்த படம் தற்போது தளபதி 63 என அழைக்கப்படுகிறது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
படத்தின் சூட்டிங் பொங்களுக்கு பிறகு ஜனவரி 21 ஆம் தேதி துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் விளையாட்டை சார்ந்த படமாக இருக்கும் எனவும் இதர்காக 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் ஏற்கனவே வெளியான செய்திகள்.
தற்போதைய அப்டேட் என்னவெனில், படத்திற்காக பிரத்யேக பயிற்சியாளர் மூலம் விஜய் தனது உடலமைப்பு மாற்றி வருகிறாராம். படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார் என செய்திகள் தெரிவிப்பதால் அதற்க்காக இந்த மாற்றாமா என்றும் சிந்திக்க தோன்றுகிறது.
கடந்த சில வருடங்களாக விஜய்யின் படங்கள் தீபாவளிக்கு தொடர்ந்து வெளியாகிறது அதே போல இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.