வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 ஜனவரி 2019 (14:54 IST)

ரஜினியுடன் டிஸ்கஸ் செய்த தரமான சம்பவம்: விஜய்சேதுபதி

ரஜினியுடன் டிஸ்கஸ் செய்த தரமான சம்பவம்: விஜய்சேதுபதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தின் டிரைலரில் இடம்பெற்ற 'சிறப்பான தரமான சம்பவத்தை இனிமேதான் பாக்கப்போற' என்ற வசனம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரஜினியுடன் தரமான சம்பவம் குறித்து படப்பிடிப்பின் இடையே தான் டிஸ்கஸ் செய்துள்ளதாக விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ''பேட்ட' படத்தின் படப்பிடிப்பின் இடையே நானும் ரஜினி அவர்களும் கேரவனின் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஒரு விஷயத்தை பற்றி டிஸ்கஸ் செய்துள்ளோம். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு தரமான சம்பவமும் குறித்து பேசியுள்ளோம். அந்த சம்பவம் வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டது என்பது குறித்தும் பேசியுள்ளோம்' என்று விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

ரஜினியுடன் டிஸ்கஸ் செய்த தரமான சம்பவம்: விஜய்சேதுபதி
மேலும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நான் நடிப்பது என்பது ஒரு தொடர்கதை என்றும், அவருக்கும் எனக்கும் சில நேரம் புரிதல் இன்றி சண்டை போட்டிருந்தாலும் அவர் மீது எனக்கு தனி அன்பு உண்டு என்றும், அந்த அன்பும் என்றும் மறையாது என்றும், கார்த்திக் சுப்புராஜ் என்மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தில் வாய்பு கொடுத்ததற்கு நன்றி என்றும் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.