அட்லீ -பிரியா வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ! வைரல் வீடியோ
இயக்குனர் அட்லீ வீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ, ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
இதையடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார், தற்போது, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா திருமணம் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து அட்லியின் மனைவி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அட்லீ- பிரியா இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது.