1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (17:32 IST)

எந்த நடிகரையும் தாழ்த்திப் பேசவில்லை… தில் ராஜு விளக்கம்!

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட தில் ராஜூ திட்டமிட்டுள்ள நிலையில் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் ஆரம்பம் முதலே சிக்கல் நிலவி வருகிறது. அதே நாளில் அஜித்தின் துணிவு படமும் ரிலீஸ் ஆவதால், இரண்டு படங்களுக்கும் சம அளவில் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தில் ராஜூ “துணிவு படத்தின் விநியோகஸ்தர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென கேட்க போகிறேன். தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1” என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார் தில் ராஜு. அதில் “நான் அந்த வீடியோவில் 30 நிமிடம் பேசினேன். அதில் இருந்து 20 செஜண்ட் வீடியோவை வெளியிட்டு வைரல் ஆக்கிவிட்டார்கள். எந்த நடிகரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ நான் பேசவில்லை” எனக் கூறியுள்ளார்.