திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (10:28 IST)

சூர்யா தேவி அளித்த புகார்… காமெடியன் நாஞ்சில் விஜயன் கைது!

சில ஆண்டுகளுக்கு முன்னர் நாஞ்சில் விஜயன் தன்னை தாக்கியதாக டிக்டாக் புகழ் சூர்யா தேவி புகாரளித்திருந்தார்.

வனிதா பீட்டார் பால் என்பவரை திருமணம் செய்துகொண்ட போது  சூர்யா தேவி , நாஞ்சில் விஜயன் , கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் அவரை விமர்சித்து அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.

இவர்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் வனிதா விவாகரத்தில் சிக்கி சின்னாபின்னமாகினர். வனிதா தன்னை விமர்சித்த ஒருவரையும் விட்டு வைக்காமல் நேரடியாக திட்டி தீர்த்தார். அதில் சூர்யா தேவி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில் நாஞ்சில் விஜயன் இப்போது வனிதாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அப்போது நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யாதேவி ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இப்போது சூர்யா தேவி அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் விஜயன் கைது செய்யப்பட்டுள்ளார்.