செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:54 IST)

பிச்சைக்காரன் 2 ரிலீஸ் மாற்றம்… ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் வேறு படம்?

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுமை பெற்றது. இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இப்போது இந்த படம் மே 19 ஆம் தேதிக்கு தள்ளிவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார்.