1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (22:28 IST)

‘’நம் முதல் எதிரி ஆதித்ய கரிகாலன்’’ -பொன்னியில் செல்வன்-2 பட டிரைலர் ரிலீஸ்!

PonniyinSelvan2
மணிரத்னம் இயக்கத்தில், லைகாவின் சுபாஷ்கரன் தாயாரிப்பில் , சரத்குமார், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன் ஆகியோரின் நடிப்பில், உருவாகி கடந்தாண்டு  வெளியான பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் தமிழ் சினிமாவின் வசூலில் முக்கிய மைல்கல்லாக  அமைந்தது.

இதையடுத்து, பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதன்படி, பொ.செ-2 படம் வரும்  ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்,  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து வரும் நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த 'பொன்னியின் செல்வன் -'2 பட டிரைலரை படக்குழு தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளது.

அதில், ''கொடுத்த காரியத்தை முடித்துவிட்டாய் தோழா''! என்று விக்ரம், வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியைப் பாராட்டும் காட்சிகளும்,  நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் ''சோழ குலத்தை வேருடன் அழிப்போம்'' என்ற கோப மொழிகளும், போர்களத்தில், ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி ஆகியோரின் ஆக்சன் காட்சிகளும், ஏ. ஆர் ரஹ்மானின் இசையும்  ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்த டிரைலர் தற்போது இணையதளத்தில் வரைலாகி வருகிறது.