விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்: வாடகைத்தாயின் மூலம் பிறந்ததா?
விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள்: வாடகைத்தாயின் மூலம் பிறந்ததா?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விரைவில் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்வார் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்றும், நாங்கள் அம்மா அப்பா ஆகி விட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்
இந்த பதிவு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது
Edited by Siva